பாலக்காடு கிருஷ்ணர் கோவிலில் ஜெயந்தி விழா கோலாகலம்
ADDED :5160 days ago
பாலக்காடு : பாலக்காடு குன்னத்தூர்மேட்டில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், பாலமுரளி கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடந்தது. கடந்த 13ம் தேதி துவங்கிய விழாவில், சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள், 20ம் தேதி காலை 9 மணியளவில், கேரள கலாமண்டலம் குழுவினரின் கீதாபாராயணம் நடந்தன. நேற்று, அதிகாலை 4 மணியளவில், மூலவருக்கு வாகசார்த்து, கணபதி ஹோமம், அபிஷேகம், 9 மணியளவில், பஞ்சவாத்தியங்களுடன் 9 யானைகள் அலங்கார அணிவகுப்புடன் சுவாமி ஊர்வலம், 10 மணியளவில், கோவில் கலையரங்கில் சித்தூர் ஸ்ரீஹரி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தன. இன்று காலை 5 மணியவில், கணபதி ஹோமத்துடன் விசேஷப் பூஜை, மாலை 5 மணியளவில், கண்ணபிரான் ரதப்பிரதிக்ஷனம், உரியடி, தீபாராதனையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, பாலமுரளி கிருஷ்ண ஜெயந்தி விழா கமிட்டியினர் மேற்கொண்டு வருகின்றனர்.