உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

ஆத்தூர்: ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, பிரத்யங்கரா தேவிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர் கைலாசநாதர் கோவில் வளாகத்தில், பிரத்யங்கரா தேவி கோவில் உள்ளது. இங்கு மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேற்று காலை, 8 மணி முதல், 11 மணி வரை, உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது. இதையடுத்து வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் பிரத்யங்கரா தேவி அருள்பாலித்தார். இதே போல், ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு பூஜைகள் நடந்தது. பின், வெள்ளி கவச அலங்காரத்தில், சுவாமி அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !