உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனிதனுக்குத் தெய்வ பக்தி அவசியமா?

மனிதனுக்குத் தெய்வ பக்தி அவசியமா?

தெய்வபக்தி இல்லாத மனிதன், மனிதன் என்ற தகுதியை இழந்தவனாகிறான். மானுடத்தியல்பின் வணங்குகின்றார் என்று மாணிக்கவாசகர் திருப் பள்ளியெழுச்சியில் குறிப்பிடுகிறார். இதன் மூலம், ஒரு நல்ல மனிதனின் இயல்பே தெய்வத்தை வணங்குவதுதான் என்பதை, அவர் தெளிவாக  எடுத்துக்காட்டி விட்டார். காசிக்குச் சென்ற ஒருவர், அங்குள்ள கங்கையில் நீராடாமல் வந்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதனால் க ங்கைக்கு ஒன்றும் நஷ்டமில்லை. மாறாக நீராடாமல் வந்தவருக்குத்தான் நஷ்டம். கங்கையில் நீராடியிருந்தால் அவரது பாவம் போயிருக்கும். அது÷ பால் இறைவனிடம் பக்தி செலுத்தாமல் போனால் அவன் திருநாமத்தை ஜபம் செய்யாமல் போனால், இறைவனைத் தியானம் செய்யாமல் போனால்  - அவ்விதம் செய்தவருக்குத்தான் நஷ்டமே தவிர - இறைவனுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. நதி என்றால் கடலில் கலந்தாக வேண்டும். கொடி என்றால்  அது கொம்பில் படர்ந்தாக வேண்டும். மனிதன் என்றால் அவன் தெய்வத்தைச் சார்ந்தே வாழ வேண்டும். கப்பலுக்கு உரிய இடம் கடல் இதயத்துக்கு  உரிய இடம் இறைவழிபாடு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !