உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துரீய நிலையில் பக்தியை அனுபவிக்க முடியுமா?

துரீய நிலையில் பக்தியை அனுபவிக்க முடியுமா?

துரீயம் என்ற சொல்லைப் பொதுவாக ஞானமார்க்கத்தில்தான் உபயோகிக்கிறார்கள். பக்தி  இல்லாமல் வாழ்க்கையே இல்லை; பக்திக்கு ஞானம்  துணையாக அமைகிறது என்பது பக்தி நூல்களின் கருத்து. ஞானம் (பிரம்மானந்தம்) இல்லாமல் வாழ்க்கையே இல்லை, ஞானத்திற்கு பக்தி துணைய õக அமைகிறது என்பது ஞானநூல்களின் கருத்து. உயர்ந்த நிலையில் ஞானமும் பக்தியும் ஒன்றே என்பது பகவான் ராமகிருஷ்ணரின் கருத்தாகும்.  விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் முறையே ஜாக்ரத், ஸ்வப்னம், கஷுப்தி என்று வேதாந்த நூல்கள் கூறுகின்றன. இந்த  மூன்று நிலைகளையும் கடந்த நிலைக்குத் துரீயம் என்று பெயர். இந்தத் துரீய நிலையில்தான் பிரம்மானந்தம் அனுபவிக்கப்படுகிறது. ராமகிருஷ்ணர்,  கிருஷ்ண சைதன்யர், நம்மாழ்வார் ஆகியவர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது - துரீய நிலையிலும் பக்தி அனுபவிக்கப்படுகிறது. என்ற  முடிவுக்கே நாம் வர வேண்டியிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !