மன அமைதியை எப்படிப் பெறுவது?
ADDED :3905 days ago
ஆசைகள் குறையக் குறைய மன அமைதியும் அதிகரிக்கும். ஆசைகள் அறவே அற்ற உள்ளத்தில் அமைதியும் பூரணமாகக் கொலு வீற்றிருக்கும். இதனை பகவான் ராமகிருஷ்ணரின், பெண்ணாசையும் பொன்னாசையும் மனதைவிட்டு அகலும்போது, ஆத்மாவிடம் வேறு என்ன தங்கியிருக்கும்? பிரம்மானந்தமே அங்கே குடிகொண்டிருக்கும் என்ற உபதேசமும் உறுதிப்படுத்துகிறது. ஆசைகள் அதிகரிக்க அதிகரிக்க, மனம் அறநெறிகளிலிருந்து பிறழும், மனம் அறநெறிகளிலிருந்து பிறழப் பிறழ, இம்மைக்கு மன அமைதியின்மையும், மறுமைக்குப் பாவமும் அதிகரிக்கும்.