சற்குரு சீமான் சுவாமிகளின் 126 ஆண்டு குருபூஜை விழா!
ADDED :3540 days ago
காரைக்கால்: காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள சற்குரு சீமான் சுவாமிகளின் 126 ஆண்டு குருபூஜைப் பெருவிழா நடந்தது. காரைக்கால் மாநகரின் பெருமையைக் கவின் பெறும் ஞானிகளும் கனவிலும் மறவாறன்றே இத்தகைய திருப்பதியின்கண் அட்டமா சித்திகளில் வல்லவராய் அகிலத்தோர் வியப்புற அதியற்புற திருவிளையாடல்கள் பல இயற்றி பிரம்மஞ்ஞானியராய் ஏழை மாரியம்மன் கோயில் அருகில் ஜீவசமாதியாக திருக்கோயிலில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் குருபூஜை பெருவிழா நடைபெறுவது வழக்கம்.நேற்று சற்குரு சீமான் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் பகல் 12மணிக்கு மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சற்குரு சீமான்னை வழிப்பட்டனர்.