உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவில் தேரோட்டம்!

மாசாணியம்மன் கோவில் தேரோட்டம்!

அன்னுார்: குப்பனுார், கைகாட்டி, மாசாணியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னுார், சிறுமுகை ரோடு, கைகாட்டியில், கருப்பராயன் சுவாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை மாலையில் இங்கு அருள்வாக்கு சொல்லப்படுகிறது. இங்கு மாசாணியம்மன் சன்னதி உள்ளது. மாசாணியம்மன் தேர்த்திருவிழா கடந்த, 26ம் தேதி மாலையில், விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. இரவு கம்பம் நடுதல், பக்தர்கள் மாலையணிதல் நடந்தது. 28ம் தேதி இரவு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் பால் அபிஷேகம், பொங்கல் வைத்தல் நடந்தது. காலை, 9:00 மணிக்கு கருப்பராய சுவாமி தேருக்கு எழுந்தருளினார். 10:35 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சுற்று வட்டாரங்களிலிருந்து பக்தர்கள் கரகம், பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மதியம், 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம், 2:30 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. பின்னர் மஞ்சள் நீராடுதலும், மறு பூஜையும் நடந்தது. ஏற்பாடுகளை  ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !