உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீகாளஹஸ்தியில் பிரம்மோற்சவம் துவங்கியது

ஸ்ரீகாளஹஸ்தியில் பிரம்மோற்சவம் துவங்கியது

திருப்பதி: காளஹஸ்தியில், மகாசிவராத்திரியை முன்னிட்டு, வருடாந்திர பிரம்மோற்சவம், நேற்று துவங்கியது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள, காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவம், நேற்று துவங்கியது. காலை, கண்ணப்ப கொடியேற்றம்; பிரம்மோற்சவம் தடையின்றி நடக்க நவ தானியங்களை முளைவிடும், அங்குரார்ப்பணம் நடந்தது. இன்று, காலை, சிவன், பார்வதி கொடி ஏற்றத்துடன், பிரம்மோற்சவம் தொடர்ந்து நடக்க உள்ளது.பிரம்மோற்சவ நாட்களில், கோவிலில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளையும் கோவில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மகாசிவராத்திரியை ஒட்டி, கூட்ட நெரிச்சல் இருக்கும் என்பதால், கோவிலுக்குள் நுழையவும், வெளியில் செல்லவும், மாற்று பாதையை கோவில் நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !