சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி: பெங்களூரில் ஏற்பாடுகள் தீவிரம்
பெங்களூரு: மகா சிவராத்திரியை முன்னிட்டு, பெங்களூரு சிவன் கோவில்களில் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பாஷ்யம் நகர்ஸ்ரீராமபுரம், பாஷ்யம் நகர் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தில், வரும், 7ம் தேதி மாலை, 5:00 மணியில் இருந்து, 8ம் தேதி காலை, 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். 7ம் தேதி மாலை, 6:00 மணி முதல், 8:00 மணி வரை, மாருதி சேவா நகர் பக்த ஜன சேவா சங்க குழுவினரின் பஜனை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, முதல் கால பூஜை; நள்ளிரவு, 12:00 மணிக்கு, இரண்டாவது கால பூஜை; அதிகாலை, 2:00 மணிக்கு மூன்றாவது கால பூஜை; 5:00 மணிக்கு நான்காவது கால பூஜை நடக்கிறது. இரவு, 10:00 மணி முதல் அதிகாலை, 5:00 மணி வரை பக்தி இன்னிசை நடக்கிறது.
சிவாஜி நகர் மீனாட்சி அம்மன் கோவில் தெரு, மீனாட்சி சுந்தரேஸ்வரா கோவிலில், 7ம் தேதி காலை, 6:30 மணிக்கு ருத்ர ஹோமம், மாலை, 6:00 மணிக்கு முதல் கால பூஜை, இரவு, 9:00 மணிக்கு, இரண்டாவது காலபூஜை, இரவு, 12:00 மணிக்கு, மூன்றாவது கால பூஜை, 8ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காவது கால பூஜை நடக்கிறது.
காளி அம்மன் ஆலயத்தில், 80ம் ஆண்டு மகா சிவராத்திரி பூஜையை முன்னிட்டு, 7ம் தேதி இரவு, 8:00 மணிக்கு பூஜையும், 8ம் தேதி பகல், 12:00 மணி முதல், 3:00 மணி வரையிலும், மாலை, 5:00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை பூஜை நடக்கிறது. வண்ணார்பேட்டை விவேக் நகர், வண்ணார்பேட்டை காசி விஸ்வநாதர் கோவிலில், 7ம் தேதி காலை, 10:30 மணி முதல் பகல், 1:30 மணி வரை கலச பூஜை, ருத்ராபிஷேகம், ஆலய அடியார்களின் பஜனை, மகா மங்களார்த்தி நடக்கிறது. மாலை, 6:30 மணியிலிருந்து இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு நடக்கிறது. 8ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு மகா மங்களார்த்தி, பிரசாதம் வழங்கப்படுகிறது. அன்று பகலில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஜெ.பி., நகர் ஜெ.பி., நகர் சிவலிங்கய்யா காலனி சிவலிங்கேஸ்வரா கோவிலில் வரும், 7ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு மகாசங்கல்பம், ஏகாதசி, ருத்ராபிஷேகம், அர்ச்சனை மங்களார்த்தி, பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. காலை, 9:00 மணியிலிருந்து ஏகாதசி ருத்ராபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிசேகம், பாஸ்மா அர்ச்சனை, வில்வ அர்ச்சனை, மகா மங்களார்த்தி, பிரசாத வினியோகம், மாலை, 6:00 மணிக்கு தேர்வீதி உலா வருகிறது.
வரும், 8ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு ருத்ராபிஷேகம், அர்ச்சனை, மகா மங்களார்த்தி,
பிரசாதம் வழங்கப்படுகிறது.
ஆர்.டி., நகர் ஆர்.டி., நகர், சோழநாயகனஹள்ளி ஆனந்தகிரி மலையிலுள்ள ஆனந்த லிங்கேஸ்வரா சேத்திரத்தில் மார்ச், 5 முதல் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
மார்ச், 5 காலை, 5:30 மணிக்கு கணபதி பூஜை, கன ஹோமம், நவகிரஹ ஹோமம், மிருதுஞ்சய ஹோமம், மகாமங்களார்த்தி, 6ம் தேதி பஞ்சாமிர்த அபிஷேகம், ருத்ராபிஷேகம், 8:30 மணிக்கு கணபதி பிரார்த்தனை, கலச ஆராதனை. தேவி ஹோமம், சுப்ரமண்ய ஹோமம், ஆஞ்சநேயா ஹோமம், கால பைரவர் ஹோமம், பிரதான ருத்ர ஹோமம், பகல், 12:25 மணிக்கு பூர்ணாஹுதி, மகா மங்களார்த்தி, தீர்த்த பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. வரும், 7ம் தேதி அதிகாலை, 3:00 மணியிலிருந்து, 4:30 மணி வரை ஆனந்த லிங்கேஸ்வரருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், ருத்ராபிஷேகம், மலர் அலங்காரம், ஆனந்த பவானிக்கு மலர் அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், கஜனானாவுக்கு சந்தன அலங்காரம். சுப்ரமணியருக்கு சந்தன அலங்காரம், ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம், நவக்கிரகங்களுக்கு வஜ்ராங்கி அலங்காரம், கால பைரவேஸ்வரருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. 8ம் தேதி அன்னதானம் வழங்கப்படுகிறது.