உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்ச் 9ல் சூரிய கிரகணம்: பழநியில் நடைதிறப்பு மாற்றம்

மார்ச் 9ல் சூரிய கிரகணம்: பழநியில் நடைதிறப்பு மாற்றம்

பழநி: சூரிய கிரகணத்தை முன்னிட்டு மார்ச் 9ல் பழநி மலைக்கோயில் மற்றும் உபகோயில்கள்
நடைதிறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

மார்ச் 9 அதிகாலை 5 மணி முதல் 6.50 மணிவரை சூரிய கிரகணம் நிகழும். இதையொட்டி பழநி மலைக்கோயில் மற்றும் திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன்கோயில், பெரியாவுடையார் கோயில்களில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.காலை 6 மணிக்கு பதிலாக 7 மணிக்கு சம்ப்ரோட்சணம் பூஜை அதாவது கோயிலை சுத்தம் செய்து காலை 8 மணிக்குமேல் மலைக்கோயிலில் விஸ்வரூப தரிசனம் உட்பட அனைத்து கோயில்களிலும் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !