அயோத்தியாப்பட்டணம் துர்க்கை அம்மன் சிறப்பு வழிபாடு
ADDED :3546 days ago
அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவிலில், துர்க்கையம்மனுக்கு மார்ச், 4 சிறப்பு வழிபாடு நடந்தது. அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவிலில், மார்ச், பகல், 12 மணியளவில், துர்க்கையம்மனுக்கு, சர்வ அபிஷேக ஆராதனைகளுடன், சிறப்பு பூஜை, வழிபாடு
நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். தொடர்ந்து, சர்வ
அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.