ஓமலூர் மாரியம்மன் பண்டிகை நிறைவு விழா
ADDED :3708 days ago
ஓமலூர்: ஓமலூரில், கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகை கடந்த, 2ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து, பொங்கல், அலகு குத்துதல், பூங்கரகம், அக்னிகரம், வாண வேடிக்கை, கலைநிகழ்ச்சி,
மஞ்சள் நீராட்டம் ஆகியவையுடன், நேற்று, பண்டிகை நிறைவடைந்தது. மூன்று நாள் நடந்த
பண்டிகையில், ஏராளமான பக்தர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து கலந்து கொண்டனர். மார்ச்,4 அம்மன், ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.