புதுச்சேரி அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா
ADDED :3545 days ago
புதுச்சேரி : ஆலங்குப்பம் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் மார்ச் 6ல் மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது.
ஆலங்குப்பத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயானக் கொள்ளை உற்சவம், கடந்த 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. மார்ச் 6 காலை 10.00 மணிக்கு, மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. விரதம் மேற்கொண்ட பக்தர்களுக்கு மிளகாய் சாந்து மற்றும் தயிர் அபிஷேகம் செய்யப்பட்டது. மார்ச் 7ம் தேதி இரவு 9.00 மணிக்கு, ரணகளிப்பு, அங்காளம்மன் வீதியுலா நடக்கிறது. மார்ச் 8ம் தேதி மாலை 6.00 மணிக்கு மயானக் கொள்ளை உற்சவம் நடக்கிறது.