காரைக்கால் நளநாராயணப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்
ADDED :3545 days ago
காரைக்கால்: திருநள்ளார் நளநாராயணப் பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் மார்ச்,6ல் நடந்தது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம், நளபுரநாயகி சமேத நளநாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ விழா கடந்த 2 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 5ம் தேதி நித்திய பூஜை ேஹாமம் திருமஞ்சனம் நடந்தது. நேற்று திருத்தேர் நளதீர்த்தத்தில் தீர்த்தவாரி மற்றும் மாலை திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.