உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாடம்பாக்கம் சிவாலயங்களில் இன்று சிவராத்திரி

மாடம்பாக்கம் சிவாலயங்களில் இன்று சிவராத்திரி

மாடம்பாக்கம்: மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் கோவிலில் இன்று சிவராத்திரி பூஜைகள் நடக்கின்றன. சேலையூரை அடுத்த, மாடம்பாக்கம் பகுதியில், பல்லவர் காலத்து பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இன்று சிவராத்திரியை முன்னிட்டு, கோவிலில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.இரவு, 9:00 மணிக்கு, முதல் கால பூஜையை அடுத்து, நள்ளிரவு, 12:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை நடைபெறுகிறது.பின், 2:00 மணிக்கு, மூன்றாம் காலமும், அதிகாலை, 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜைகளும் நடைபெற உள்ளன. குரோம்பேட்டையில் இருந்து சிட்லபாக்கம், ராஜகீழ்ப்பாக்கம் வழியாக மாடம்பாக்கத்திற்கு சிற்றுந்து சேவையும் துவக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 9841210813 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், மகா சிவராத்திரியை ஒட்டி, திருவொற்றீஸ்வரருக்கு, இன்று, நான்கு கால பூஜைகள் நடக்கின்றன. இரவு, 9:00, 11:00, அதிகாலை, 2:00, 4:00 மணிகளில், அந்த பூஜைகள் நடைபெறும். அதில், சந்தனாதி தைலம், நல்லெண்ணெய், பழ வகைகள், பஞ்சாமிர்தம், பசும்பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் மற்றும் அரிசி, மஞ்சள், திரவிய பொடிகளால், ஒவ்வொரு கால பூஜைக்கும், சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்படும். இரவு, 11:00 மணிக்கு மேல், ஆதிபுரீஸ்வருக்கு, 108 சங்காபிஷேகம் நடக்கும்.

மேலும், சிவபுரம் ஐயா தம்பிரான் தோழர் கபிலனாரின் சிவராத்திரி சிறப்புரை, ஆடிய பாதம் தேடிய சொந்தம் குழுவின் சிவராத்திரி நாடகம் மற்றும் நாட்டியாஞ்சலி போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !