வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு
ADDED :3545 days ago
வேளச்சேரி: தண்டீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, இன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
மகா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோவிலில், இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, கலசபூஜை ஓமம், பூர்ணாஹூதி, கலச புறப்பாடு, தண்டீஸ்வரருக்கு, 1,008 கலசாபிஷேக யாகசாலை பூஜைகள் நடைபெறும்.காலை, 9:00 மணிக்கு, தண்டீஸ்வரர் சுவாமிக்கு, மஹன்யாச ஏகாதச ருத்ரபாராயணம் நடக்கிறது. மகா சிவராத்திரி விழா, பக்தர்கள் உபயத்துடன் நடக்கிறது.