உள்ளூர் செய்திகள்

குழந்தை வரம்

திருவடகுரங்காடுதுறை தலத்தில் குலைவணங்கி நாதருடன் அருள்பாலிக்கும் அழகுசடை முடியம்மன். குழந்தைவரம் அருள்வதில் வல்லவள். குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள், 16 விரலி மஞ்சளில் மாலைக்கட்டி, அம்மனுக்கு சாத்தி, முளைப்பயிறை அம்மன் வயிற்றில் கட்ட, அவர்கள் வேண்டுதல் நிறைவேறுகிறது. வேண்டுதல் நிறைவேறப்பெற்ற பெண்கள், தங்களது வளைகாப்பன்று, அம்மனுக்கும் வளையலிட்டுக் காணிக்கை செலுத்துகின்றனர். பின்னர் குழந்தை பிறந்தவுடன் அம்மனுக்கு புடவை சாத்தி நன்றி கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !