உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி விழா: கோயில்களில் கோலாகல கொண்டாட்டம்!

மகா சிவராத்திரி விழா: கோயில்களில் கோலாகல கொண்டாட்டம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயிலில்களிலும் இன்று(மார்.,07) மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. கிராமத்தில் உள்ள காவல் தெய்வங்கள், இஷ்ட, குல தெய்வ கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மாசி அமாவாசை நாளில் மகா சிவராத்திரி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு, இன்று மதியம் ஏராளமான கோயில்களில் சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் தங்கள் குல தெய்வங்களுக்கு  நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். சிவாராத்திரி விழாவிற்காக வெளியூர்களில் உள்ளோர் தங்களது கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு:
மகாசிவராத்திரி விழா கொண்டாட்டம் முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து , கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குஜராத் கட்ச் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து லஷ்கர் பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாக கூறப்படுகிறது. சிவராத்திரியை சீர்குலைக்க 10 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவலையடுத்து, இந்தியாவில் டில்லி, மும்பை, கோல்கட்டா, லக்னோ, ஜெய்ப்பூர், போபால், , விஜயவாடா, சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புப் படையினரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இந்நகரங்களில் கோயில்கள், மத வழிபாட்டு தலங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மக்கள் கூடும் பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !