உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி தேரோட்டம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி தேரோட்டம்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும், பக்தர்கள் வடம் பிடிக்க தேர் வலம் வந்தது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி சிவராத்திரி விழா 9ம் நாளில்,  அலங்கரித்த மாசி திருத்தேரில், சுவாமி, பர்வதவர்த்தனி அம்மன், பிரியா விடையுடன் எழுந்தருளினார். கோயில் குருக்கள் மந்திரம் முழங்க சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது. பின், மாசி தேரின் வடத்தை யாத்திரை பணியாளர்கள், பக்தர்கள் ஏராளமானோர் சிவ., சிவ., கோஷமிட்டு இழுத்து, கோயில் ரதவீதியில் வலம் வந்தனர். இதில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் மகேந்தினர், இந்து மக்கள் கட்சி தலைவர் பிரபாகரன், அதிமுக நகர் செயலாளர் பெருமாள் மற்றும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !