மகா சிவராத்திரி விழா: சிவன் கோயில்களில் விடிய விடிய சிறப்பு பூஜை!
மகா சிவராத்திரியையொட்டி பல்வேறு சிவன் கோவில்களில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடந்தது.
புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு விரைவில் கும்பாபிேஷகம் நடைபெற வேண்டியும், ராஜா சாஸ்திரி தலைமையில், 11 முறை ருத்ர வேதபாராயணம் வாசித்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் வேத ஆசிரம குருகுல மாணவர்கள் பங்கேற்றனர்.மகாசிவராத்திரியை முன்னிட்டு மாலை 6:00 முதல் விடியற்காலை 6:00 மணி வரை நான்கு கால பூஜைகளும், சிறப்பு அபிேஷகங்களும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
மொரட்டான்டி நவக்கிரக கோவில்: கோகிலம்பிகா சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை 6 மணிக்கு 108 லிட்டர் பால் அபிேஷகமும், 11:00 மணிக்கு 108 இளநீர் அபிேஷகமும், 1:00 மணிக்கு 108 சங்க அபிேஷகமும், காலை 5:00 மணிக்கு 108 கலச அபிேஷகமும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் சிதம்பர குருக்கள், கீதா சங்கர குருக்கள், கீதா ராமன் குருக்கள், சீத்தாராமன் ஆகியோர் செய்திருந்தனர். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
சித்தானந்தா கோவில் கருவடிக்குப்பம்: மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை நான்கு கால அபிேஷகம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். சீரடி சாயிபாபா கோவில் பிள்ளைச்சாவடி: இரவு 7:00 மணிக்கு முதல் கால பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து, இரவு 10:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு 1:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சீரடி ÷சவா சமீதி குழுவினர் செய்திருந்தனர்.