ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் லட்சார்ச்சனை!
ADDED :3545 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று லட்சார்ச்சனை விழா நடந்தது. ஜனவரி 20ல் ஆண்டாள் கோயில் தங்கவிமான கோபுர கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 48 நாள் மண்டல பூஜை நடந்த நிலையில் தினமும் காலை 11 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம், சிறப்பு பூஜை நடந்தது. நிறைவு நாளான நேற்று கோயிலின் முன் மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு காலை 8 மணி முதல் லட்சார்ச்சணை நடந்தது. பத்ரிநாராயாணா பட்டர் தலைமையில் முத்துபட்டர், கிரிபட்டர், அனந்தநாராயணபட்டர், சுதர்சனம் மற்றும் பட்டர்கள் லட்சார்ச்சனை செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.