உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில்களில் மகா சிவராத்திரி வழிபாடு!

திருப்பரங்குன்றம் கோயிலில்களில் மகா சிவராத்திரி வழிபாடு!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர் கோயிலில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன. சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ் தானத்தில் எழுந்தருளிய சத்தியகிரீஸ்வரருக்கு மாலை 5.30 முதல் இரவு 12.30 மணி வரை நான்கு கால பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள சுவாமிக்கு இரண்டு கால பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. மலை மீதுள்ள காசி விஸ்வநாதர், கீழ ரத வீதியில் எழுந்தருளிய குருநாத சுவாமிக்கு இரண்டு கால அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. மலைக்குப் பின்புறமுள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு நான்கு கால யாக பூஜைகள், கஜேந்திர பூஜை, லட்சுமி பூஜைகள் நடந்தன. விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயில் காசி விஸ்வநாதருக்கு விடிய விடிய நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !