காந்தள் காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி பெருவிழா
ADDED :3546 days ago
ஊட்டி: ஊட்டி காந்தள் காசி விஸ்வநாதர் கோவிலில், மகா சிவராத்திரி பெருவிழா நேற்று நடந்தது. இதை தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு கால சந்தி பூஜை, 11:00 மணிக்கு, உச்சி கால பூஜையை தொடர்ந்து, பகல், 11:30 மணிக்கு அன்னதானம் துவங்கியது. பிற்பகல், 2:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகாயாக பூஜையும், மாலை, 3:30 மணிக்கு, மகா அபிஷேகம், மாலை, 5:00 மணிக்கு மகா தீபாராதனையை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு சுவாமி ஆலய வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பரதநாட்டியம் நிகழ்ச்சியும், இரவு, 8:00 மணிக்கு சங்கீத சாம்ராட் செம்மை சுவாமிகளின் சிஷ்யர் கலாரத்தினம் ஐயப்ப கானஜோதி ஜெயனின் பக்திபாடல் மற்றும் கர்னாடிக் கச்சேரியும் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.