பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா துவங்கியது!
பண்ணாரி: பண்ணாரி மாரியம்மன் கோவிலில், குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோவிலில், நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் குண்டம் திருவிழா துவங்கியது. சுற்றுவட்டார கிராமத்தினர் அம்மனிடம் பூ வரம் பெற்றனர். அடுத்து அம்மன் சப்பரம் சிக்கரம்பாளையம் கிராமத்துக்கு சென்றது. இதேபோல் ஏழு நாட்கள் சத்தியமங்கலம் சுற்றுப்பகுதியில் ஊர்வலம் சென்று மீண்டும் கோவிலை வந்தடையும். அதன்பின், மார்ச், 15ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கும். 22ம் தேதி, விழாவின் முக்கிய நிகழ்வான அக்கினி குண்டம் மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 23ம் தேதி இரவு புஷ்பரதம், 24ம் தேதி மஞ்சள் நீராடுதல், 25ம் தேதி விளக்கு பூஜை நடைபெறும். 28ம் தேதி மறுபூஜையுடன் குண்டம் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், கோவில் பணியாளர்கள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.