உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சண்டி கருப்புசாமி, காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சண்டி கருப்புசாமி, காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, சண்டி கருப்பசாமி கும்பாபி?ஷக விழா வரும், 11ம் தேதி நடக்கிறது. ராசிபுரம் அடுத்த, அரியாக்கவுண்டம்பட்டி கொங்கலம்மன் கோவில் அருகில் உள்ள சண்டி கருப்புசாமி, நாககன்னி கோவிலின் கும்பாபிஷேக விழா, வரும், 11ம் தேதி நடக்கிறது. 33 அடி கருப்புசாமி சிலை நிறுவப்பட்டு, வரும், 10ம் தேதி பவானி சொக்கநாதர் ஆலயத்தில் இருந்து, காவிரி தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. அதிகாலை, 5 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. மறுநாள் (11ம் தேதி) அதிகாலை, 5 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தன ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. காலை, 7 மணிக்கு கடம் புறப்படுதல் நிகழ்ச்சியும், 8 மணிக்கு சண்டி கருப்புசாமி, நாககன்னி சுவாமிகளுக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது.

* ராசிபுரம்- நாமக்கல் சாலை, ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழா வரும், 11ம் தேதி நடக்கிறது. காளியம்மன், வாராஹி அம்மன், கற்பக விநாயகர், அரசு வேம்பு கல்யாண விநாயகர், நாககன்னி, நாகவள்ளி, நாகராஜா பரிவாரம் ஆகியவைகள் திருப்பணி செய்யப்பட்டு, தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகள் வரும், 10ம் தேதி துவங்குகிறது. காலை, 9 மணிக்கு நவக்கிரக ஹோமம் நடக்கிறது. மறுநாள் (11ம் தேதி) அதிகாலை, இரண்டாம் கால யாக பூஜைகள் நடக்கின்றன. காலை, 7 மணிக்கு மேல் காளியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கும், கோபுர கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !