தேனி மாவட்டத்தில் மகாசிவராத்திரி சிறப்பு பூஜை
ADDED :3509 days ago
தேனி : மாவட்டத்தில் மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குல தெய்வ கோயில்களில் இரவு சிறப்பு பூஜை நடந்தது. பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேனி சோமாஸ்கந்தர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சின்னமனூர் மாவூத்து அய்யனார் கோயிலில் மாலையில் சுவாமி பெட்டி எடுத்து ஆற்றுக்கு சென்று வந்தனர். ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயிலில் நான்கு கால பூஜை நடந்தது. சக்கம்பட்டி அழகர்சாமி நாயக்கர் கோயில், சக்கம்பட்டி சீலக்காரியம்மன் கோயில், அய்யனார் கோயில், மதுரைவீரன் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.