பீமேஸ்வரர் கோவில் மஹாசிவராத்திரி கோலாகலம்
ADDED :3613 days ago
தாம்பரம் : பழைய தாம்பரம் கிராமத்தில் உள்ள பீமேஸ்வரர் கோவிலில், நேற்று மஹா சிவராத்திரி கோலாகலமாகநடந்தது.பழைய தாம்பரம் கிராமத்தில் பழமையான, தர்மாம்பிகை உடனாய பீமேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு, நேற்று மஹா சிவராத்திரி விழா சிறப்பாக நடந்தது. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று இரவு ௭:௦௦ மணிக்கு முதல் கால அபிஷேகம் துவங்கியது. விழாவை ஒட்டி, நான்கு நாட்டியப் பள்ளி மாணவியரின், நடன நிகழ்ச்சிகள் நடந்தன.