பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை பூஜை!
ADDED :3511 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி, சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து, நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். மேலும், அம்பராம்பாளையம் ஆற்றில், முன்னோர்களுக்கு பலரும் திதி கொடுத்து வழிபட்டனர். பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், மாரியம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.