உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா

திண்டிவனம்: திண்டிவனம்-செஞ்சி ரோட்டிலுள்ள, அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று, மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை ௧௧:௩௦ மணியளவில், அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசூர சம்ஹாரத்துடன், ஆதிபராசக்தியாய் அமர்ந்து, பூங்கப்பரை காளி வேஷத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. மயானக்கொள்ளை நடக்கும் மாரிசெட்டக்குளம் பகுதிக்கு ஊர்வலம் சென்றடைந்தது. அங்கு மயான கொள்ளை உற்சவம் நடந்தது. முன்னதாக, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மன் வேடமணிந்து, தெருக்களில் ஆடியபடி சென்றனர். திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., சிலம்பரசன் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !