சொர்ணபுரீஸ்வரருக்கு ஆறு கால பூஜை
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஆறுகால பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 6 மணிக்கு தேவகணம் பூஜை, இரவு, 8 மணிக்கு பூதகணம், 10 மணிக்கு, ராட்சஷகணம், நள்ளிரவு, 12 மணிக்கு, மனித கணம், நேற்று அதிகாலை, 2 மணிக்கு சித்தர்கள் கணம், 4 மணிக்கு ஆதிபராசக்தி என, ஆறுகால பூஜைகள் நடந்தது. மூன்றாம் கால பூஜையின் போது, சொர்ணபுரீஸ்வரர், பெருமாள் அவதாரத்திலும், நான்காம் கால பூஜையில் அர்த்தநாரீஸ்வரர், ஐந்து மற்றும் ஆறாம் கால பூஜையில், அண்ணாமலையார் அலங்காரத்தில் சொர்ணபுரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல், ஆத்தூர் கைலாசநாதர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வெள்ளை விநாயகர் மற்றும் ஏத்தாப்பூர் கோவில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடந்தது.
* தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் மற்றும் ஜலகண்டாபுரம் கோட்டைமேடு சூரியேஸ்வர் கோவில்களில், நேற்று முன்தினம் இரவு, நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தது.
* ஓமலூர் கோட்டை பகுதியில் உள்ள வசந்தீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, 48 கலச பூஜை, ஹோமம், அபிஷேகம், ஆராதனை மற்றும் ஆறுகால பூஜை நடந்தது.