உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கமலா பீடத்தில் 108 தம்பதியினர் யாக பூஜை

திருவண்ணாமலை கமலா பீடத்தில் 108 தம்பதியினர் யாக பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, உலக நன்மைக்காக கமலா பீடம் சார்பில் நடத்திய யாக பூஜையில், 108 தம்பதியினர் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், தலையாம்பள்ளம் அருகே சக்கரத்தாழ்வார் மடை கிராமத்தில், 200 ஆண்டுகளாக வற்றாமல் இருக்கும் குளக்கரையில், சதுர்வேதநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, கமலா பீடம் சார்பில், பீடாதிபதி சீனுவாசன் தலைமையில், உலக நன்மைக்காகவும், குடும்ப நன்மைக்காகவும், இயற்கை பேரிடர் தவிர்த்திடவும், 108 யாக குண்டங்கள் அமைத்து, 108 தம்பதியர் அமர்ந்து யாக பூஜை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, சதுர்வேதிநாயகி அம்மனுக்கும், கமலா பீட உற்சவர்களான கமலதாரணி, கமலக்கண்ணன் மற்றும் ஐஸ்வர்யேஸ்வர மூர்த்திகளுக்கும், 108 தம்பதியினர் புனித நீரை கொண்டு அபிஷேகம் செய்தனர். பிறகு தீபாரதனை நடந்தது. முன்னதாக, சாதுகளுக்கு மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !