உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்துார்பேட்டையில் மயானக்கொள்ளை!

உளுந்துார்பேட்டையில் மயானக்கொள்ளை!

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை பாளையப்பட்டு அங்காளம்மன் சுவாமி வல்லாளராஜன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடந்தது. உளுந்துார்பேட்டை பாளையப்பட்டு அங்காளம்மன் சுவாமி, அமைச்சார் தெரு அங்காளம்மன் சுவாமி, மயான கொள்ளை திருவிழா நடந்தது.  அதனையொட்டி கடந்த 2ம் தேதி இரவு 10.30 மணிக்கு சக்தி கரகம் வருதலும், கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் முதல் உற்சவ விழா துவங்கியது. 3ம் தேதி இரவு அம்மன் வீதியுலா, 4ம் தேதி, 5ம் தேதி, 6ம் தேதி இரவு மின் விளக்கு அலங்கார ஊர்தியில் அம்மன் வீதியுலா, 7ம் தேதி இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொலு வைத்தலும், நள்ளிரவு மயானத்தில் அம்மன் உருகூட்டி சக்தி அழைத்தலும், ஊர் தேவதைகள் வழிபாடும் நடந்தது.நேற்று காலை 6:00 மணிக்கு  பூங்கரகம் கைலாசநாதர் குளக்கரையில் இருந்து புறப்பட்டு கோவிலை சென்றடைதலும், 10:00 மணிக்கு பள்ளையம் போடுதல் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு உளுந்தாண்டார்கோவில் நயினார் வகையறாவினரை, பாளையப்பட்டு அங்காளம்மன் கோவில் தர்மகர்த்தாக்கள் அரசக்காரர், அதிகாரி, பூசாரியுடன் சென்று கோவிலுக்கு அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 3.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மருளாளிகள் அம்மனுடன் மயான புறப்பாடும், வல்லாளராஜன் கோட்டை அழித்து நிசாசினி வதம் செய்தலும், மயானத்தில் பிரசாதம் படைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !