சங்கமேஸ்வரர் கோவிலில் விரிப்பு: போடாததால் பக்தர்கள் தவிப்பு
ADDED :3513 days ago
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவில் நடைபாதையில், கால் விரிப்பு இல்லாததால், பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலில், பவானி சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. பிரபல பரிகார ஸ்தலம் என்பதால், தினமும் பக்தர்கள் மற்றும் மக்கள் அதிக அளவில் வருகின்றனர். தற்போது வெயில் காலம் துவங்கியுள்ளது. இதனால் கோவில் ராஜகோபுரம் முதல், சங்கமேஸ்வரர் சன்னதி வரை ஆண்டு தோறும் பக்தர்களின் நலன் கருதி கால் விரிப்பு போடப்படும். ஆனால் நடப்பாண்டில் இதுவரை, கோவில் நிர்வாகம், கால் விரிப்பை போடாமல் உள்ளது. இதனால் அமாவாசை தினமான நேற்று முன்தினம், கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவதிக்கு ஆளாக நேரிட்டது. காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைபாதையில், கால் விரிப்பு போட, கோவில் நிர்வாகத்தினர், நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.