உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி கோவிலில் திருத்தேரில் உற்சவமூர்த்திகள் உலா!

காளஹஸ்தி கோவிலில் திருத்தேரில் உற்சவமூர்த்திகள் உலா!

திருப்பதி: காளஹஸ்தி பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் காலை, சோமஸ்கந்தமூர்த்தி, ஞானப்ரசூனாம்பிகையும் திரத்தேரில் வலம் வந்தனர்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவம், மார்ச், 2 முதல் நடந்து வருகிறது. ஆறாம் நாளான நேற்று காலை, சோமஸ்கந்தமூர்த்தி, பெரிய திருத்தேரிலும், ஞானப்ரசூனாம்பிகை சிறிய திருத்தேரிலும் வலம் வந்தனர். அதேநாள் இரவு பிரம்ம ராத்திரி என்பதால், சோமஸ்கந்த மூர்த்தி, ஞானபிரசூனாம்பிகை, சொர்ணமுகி ஆற்றில், தெப்பத்தில் வலம் வந்தனர். இதை காண, பக்தர்கள், ஆற்றங்கரையில் திரளாக கூடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !