மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வெற்றி மேல் வெற்றி தான்!
அறிவாளிகளுடன் பழகும் குணமுள்ள மிதுன ராசி அன்பர்களே!
இந்த மாதம் அதிக நன்மைகளை காணலாம். சூரியன், புதன், செவ்வாய், சனி, ராகு ஆகியோரால் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். சுக்கிரன் ஏப்.1வரை நன்மை தருவார். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செயல்பாடுகள் எளிதில் நிறைவேறும். உங்கள் மீது இருந்து வரும் பொல்லாப்பு மறையும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். சகோதரிகளால் உதவி கிடைக்கும். பொருள் சேரும். விருந்து விழா சென்று வருவீர்கள்.
தொழில், வியாபாரத்தில் பின்தங்கிய நிலை மறையும்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் அடையும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டியாளர்களை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். லாபம் நன்றாக இருக்கும். மார்ச் 28,29ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு தொடர்ந்து சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு புதன் சாதகமாக காணப்படுவதால் சிறந்த மதிப்பெண்ணும், மதிப்பும் கிடைக்கும்.
போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும் மாதமாக இருக்கும். விளைச்சல் சிறப்பாக இருக்கும். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை, ஆபரணங்கள் வாங்கலாம். கணவரின் அன்பு கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். புத்தாடை, நகை வாங்குவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
நல்ல நாள்: மார்ச் 16,17,21,22,28,29,30,31, ஏப்.1,6,7,8,9,12,13.
கவன நாள்: ஏப். 2,3 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 3,4,7
நிறம்: செந்துõரம், பச்சை, சிவப்பு
பரிகாரம்: நாக தேவதையை வணங்கி வாருங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுங்கள். சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெள்ளை உடை சாத்துங்கள்.