சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வரப்போகுது வருமானம்!
யாருக்கும் அஞ்சாத மனம் படைத்த சிம்ம ராசி அன்பர்களே!
சாதகமற்ற கிரகங்களால் பிரச்னையைச் சந்தித்த உங்களுக்கு இனி வாழ்வில் வசந்தம் தென்படும். குடும்ப பிரச்னை படிப்படியாக மறையும். மனதில் தெளிவு உண்டாகும். உங்களுக்கு இருந்த அவப்பெயர் மறையும். ஏப். 1 க்கு பிறகு நன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. மாத முற்பகுதியில் முயற்சியில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுக்கிரனால் ஏப். 1 க்கு பிறகு மகிழ்ச்சி ஏற்படும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
தொழில், வியாபாரிகள் அதிக உழைப்பின் பேரில் வருமானத்தை பெருக்கலாம். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அதிர்ஷ்டவசமாக திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. மார்ச் 30க்கு பிறகு அரசு வகையில் பிரச்னையைச் சந்திக்கலாம். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஏப். 2,3ல் பகைவர்களை எதிர்த்து வெல்லும் ஆற்றல் பிறக்கும். பெண்கள் வகையில் இருந்த பிரச்னை ஏப். 1 க்கு பிறகு மறையும்.
பணியாளர்களுக்கு புதிய பதவி தேடி வரும். அரசு ஊழியர்கள் மார்ச் 30 க்கு பிறகு அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். விடாமுயற்சி எடுத்தால் தான் கோரிக்கைகள் நிறைவேறும்.
கலைஞர்களுக்கு மாத முற்பகுதியில் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். ஏப். 1 க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சுமாரான பலனையே காணமுடியும்.
மாணவர்கள் சிறப்பான நிலையை காணலாம். மார்ச் 30க்கு பிறகு விடாமுயற்சி தேவைப்படும்.
ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். விவசாயிகளுக்கு தேவையான வருமானம் கிடைக்காமல் போகலாம். காய்கறி, கீரை வகைகளில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க பொறுத்திருக்க வேண்டும்.
பெண்கள் மகிழ்ச்சியான வாழ்வு நடத்துவர். கணவரின் அரவணைப்பு கிடைக்கும். வருமானப் பெருக்கத்தால் ஆடை, நகைகளையும் சன்மானமாக தருவார். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். சகோதரிகளால் நன்மை ஏற்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
நல்ல நாள்: மார்ச் 14,15,16,17,21,22,25,26,27 ஏப்.2,3,4,5,10,11,12,13
கவன நாள்: ஏப். 6,7 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,7
நிறம்: பச்சை, வெள்ளை
பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபட்டு வாருங்கள். அஷ்டமியன்று பைரவர் கோவிலுக்கு சென்று ஏழைகளுக்கு துவரை தானம் செய்யுங்கள். தினமும் காலையில் சூரியனை வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும்.