வடமதுரை பகுதியில் கோயில் திருவிழாக்கள்!
ADDED :3613 days ago
வடமதுரை: அய்யலுõர் அருகே வேங்கனுõர் செம்மடை பாலகணபதி, விஸ்வநாதன், விசாலாட்சி, கருப்பணசாமி கோயில் சிவராத்திரி திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கியும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மூன்றாம் நாளான நேற்று மதியம் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது.
* சுக்காம்பட்டி மூங்கில்மலை அடிவாரத்திலுள்ள முனியாண்டி கோயிலிலும் சிவராத்திரி திருவிழா 2 நாட்கள் நடந்தது. பல்வேறு சிறப்பு பூஜை, நேர்த்திக்கடன் வழிபாடு, கலைநிகழ்ச்சி நடந்தன.
* வடமதுரை மேற்கு ரதவீதி காமாட்சியம்மன் கோயிலிலும் சிவராத்திரியை முன்னிட்டு 2 நாட்கள் விழா நடந்தது. ஹோம பூஜைகளும், திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அலங்கரிக்கபட்ட மின்அலங்கார ரதத்தில் அம்மன் வடமதுரை தேர் வீதிகள் வழியே வலம் வந்தார்.