திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசை பூஜை!
ADDED :3701 days ago
திருமலைக்கேணி: சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பால், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்தில் அன்னதானம் நடந்தது.