கடவுளின் நண்பன் யார்?
ADDED :3897 days ago
நேர்மையான மனிதன்தான் கடவுளின் நண்பன். ஏனென்றால் அவன் கடவுளைப் போலவே இருக்கிறான். நல்லொழுக்கங்களுடன் நேர்மையாகவும், உலக நன்மைக்காகவும் உழைப்பவர்களுக்கு-தெய்வங்கள் தாங்களாக வரிந்து கட்டக்கொண்டு ஓடி வந்து உதவி செய்வார்கள். குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். (குறள்-1023) பொருள் என் குடியை உயரச் செய்வேன் என்று முயற்சி செய்யும் ஒருவனுக்கு உதவுவதற்கு, தெய்வம் ஆடையை வரிந்துகட்டிக்கொண்டு தானே முற்பட்டு நிற்கும்.