வாமன அவதாரத்தின் சிறப்பு என்ன?
ADDED :3897 days ago
விண்ணையும் மண்ணையும் அளந்த இரண்டு திருவடிகளை உடையவன் வாமனன். அன்னை ஆண்டாள் வாமனாவதாரத்தில் ஈடுபாடு கொண்டவர். அதனால் அவர் திருப்பாவையில், ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி, என்றும், அன்றிவ்வுலகம் அளந்தாய் என்றும், இரண்டு முறை வாமனனைக் குறிப்பிடுகிறார்.