இறையருளை எப்படி பெறுவது?
ADDED :3897 days ago
நன்னடத்தை, உலகப்பற்றற்ற வாழ்க்கை ஆன்மிக சாதனைகள் ஆகியவற்றின் மூலம் நாம் இறையருளைப் பெற முடியும். மற்றவர்களுக்கு நாம் அன்பை வழங்கினால், நாம் இறைவனின் அன்பைப் பெற முடியும். மற்றவர்கள் மீது நாம் கருணை காட்டினால், நாம் இறைவனின் கருணையைப் பெற முடியும். பிறரை நாம் மன்னித்தால், இறைவனிடம் நமக்கு மன்னிப்புக் கிடைக்கும். பொய்யர்கள் இறைவனை அணுகமாட்டார்கள். அவர்களுக்கு இறைவன் புலப்படமாட்டான். மாறாக, மெய்யடியார்களுக்கு இறைவன் நிச்சயம் புலப்படுவான். கொடிய துன்பங்களால் வாடி - வருந்தும் நிலை ஏற்பட்டாலும், இறைவனை நினைப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. விட்டுவிடக்கூடாது. அத்தகையவர்களுக்கு இறைவன் அருளால் வீடுபேறு கிடைக்கும்.