சாரதா ஆசிரமத்தில் ராமகிருஷ்ணர் ஜெயந்தி!
ADDED :3501 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் ராமகிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு ரதோற்சவம், சிறப்பு ஹோமம் நடந்தது. உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில், ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா நடந்தது. ஆசிரமத் தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா தலைமை தாங்கினார். ராமகிருஷ்ண மடம் தலைமை சுவாமிஜி அனந்தானந்தஜி மகராஜ் முன்னிலை வகித்தார். நேற்று அதிகாலை 4.45 மணிக்கு மங்கள ஆரத்தி, சுப்ரபாதம், 5.15 மணிக்கு சிறப்பு பூஜை, 8.௦௦ மணிக்கு ராமகிருஷ்ணரின் சிறப்பு அலங்காரத்தில் ரதோற்வசம், பஜனை நடந்தது. 9:15 மணிக்கு வேதபாராயணம், அர்ச்சனை, 11:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. யத்தீஸ்வரி நித்ய விவேக ப்ரிய அம்பா சிறப் புரையாற்றினார்.