முக்தீஸ்வரர் கோயில் கர்ப்பக்கிரகத்தில் சூரியகதிர்கள்: பக்தர்கள் பரவசம்!
ADDED :3632 days ago
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் வழியே ஊடுருவும் நிகழ்வு நடைபெற்றது. மார்ச், செப்டம்பரில் சில நாட்கள் மட்டும் இந்த அரிய நிகழ்வு நடக்கும். நேற்று(மார்.11ல்) மூலவரை தரிசிக்க தெப்பக்குளம் மைய மண்டபத்தை தொட்டபடி உதித்த சூரிய பகவான் நந்தியை கடந்து பிரவேசித்தார்.இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய் தனர்.