உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணத்தடை நீக்கும் திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்!

திருமணத்தடை நீக்கும் திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில்!

பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் 18ம் தேதி நடப்பதை முன்னிட்டு, இந்த சிறப்பு பகுதி  வெளியிடப்படுகிறது. திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஹேமாம்புஜவல்லி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. 1500 ஆண்டுகள்  பழமைவாய்ந்த, பல்லவர்கள் காலத்தில் ஓம் என்ற வடிவத்தில் இருந்த திருக்கோவில், கருங்கற்களால் திருத்தி அமைக்கப்பட்டன. ÷ ஹமாம்புஜவல்லி  தாயாருக்கு  செங்கமலத்தாயார், பொற்தாமரைகொடியாள் என சிறப்பு பெயர்கள் உண்டு. ஆண்டுதோறும்  பங்குனி மாத உத்திரம்  நட்சத்திரத்தில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, சேர்த்தி உற்சவத்தில் பெருமாள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருள்பாலிக்கின்றனர். மாதந்தோறும் நடைபெறும் உத்திர நட்சத்திரத்தில் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆடி வெள்ளிக்கிழமைகளில் பூவாலங்கி  சேவையிலும் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக தவத்தால் பிறந்த ஹேமாம்புஜவல்லி தாயார்  பெரு மாளை திருமணம் செய்துள்ளதால், இக்கோவிலில் வேண்டுவோருக்கு  திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு, கடன் நிவர்த்தி, சகல ஐஸ்வர்யங்கள்  பெருகும் என்பது நம்பிக்கை.  கடன் நிவர்த்தி, ஐஸ்வர்யங்கள் பெருக வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !