மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :3496 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. சமஸ்தானம் தேவஸ்தான செயல் அலுவலர் சுவாமி நாதன் கலந்து கொண்டார். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 10 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.திருவிழா தொடர்ந்து 23ம் தேதி வரை நடக்கிறது. தினமும் இரவு 7.30 மணிக்கு அம்பாள் நகர முக்கிய வீதிகளில் பவனி வருகிறார். 23ம் தேதி பகல் 1.30 மணிக்கு மேல் பூக்குழி உற்சவம் பூ வளர்த்தல் நடைபெறும். இரவு 10 மணிக்கு அக்னிசட்டியுடன் பூக்குழி இறங்குதல் நடைபெறும்.