உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் கோபுர கலசங்கள் பொருத்தும் பணி!

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் கோபுர கலசங்கள் பொருத்தும் பணி!

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம், பூவராக சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, ராஜகோபுரத்தில், தங்க முலாம் பூசப்பட்ட புதிய கலசங்கள்  பொருத்தும் பணி நடந்தது. கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள, பூவராக சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம், வரும் 18ம் தேதி, காலை  9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடக்கிறது. அதனையொட்டி, கும்பாபிஷேகப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. யாகசாலை  அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. ராஜ கோபுரத்தில், தங்க முலாம் பூசப்பட்ட புதிய கலசங்கள் அமைக்கும் பணி நேற்று நடந்தது. ÷ பாரூர் ராமச்சந்திரா மருத்துவமனை இயக்குநர் வெங்கடாசலம், திருப்பணிக் குழுத் தலைவர் சண்முகம், கோவில் செயல் அலுவலர் சீனிவாசன்  மற்றும்  நிர்வாகத்தினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !