பழநி மலைக்கோயில் ரோப்கார் சேவை நிறுத்தம்
ADDED :3700 days ago
பழநி : பழநி மலைக்கோயில் ’ரோப்கார்’ மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று(மார்ச்,14) ஒருநாள் மட்டும் நிறுத்தப்பட உள்ளது. இதில் மாதாந்திர பராமரிப்பு பணியில் உருளைகள், கம்பிவடம், பெட்டிகளை கழற்றி ஆயில், கிரீஸ் இட்ட பின், ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெறும். அதில் பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்தபின் ’ரோப்கார்’ நாளை (மார்ச்,15) முதல் வழக்கம்போல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என, பழநிகோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.