புன்னை வனநாதர் கோவிலில் பங்குனி உத்திர விழா
ADDED :3506 days ago
க.பரமத்தி: புன்னம் பஞ்சாயத்திற்குட்பட்ட, புன்னை வனநாதர் கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதான விழா வரும், 23ம் தேதி நடக்கவுள்ளது. கரூர் அடுத்த, புன்னத்தில் புன்னை வனநாயகி உடனுறை புன்னை வன நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள ஆறுமுக சுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திர விழாவையொட்டி, சண்முக அர்ச்சனை விழாவும், இதையடுத்து சிறப்பு அபிஷேகம், அன்னதானம், வரும், 23ம் தேதி நடக்கிறது. அன்னதான விழாவிற்கு தேவையான அரிசி, பருப்பு, காயகறி மற்றும் அபிஷேகத்திற்கு தேவைப்படும் பால், தயிர், இளநீர் வழங்க விருப்பமுள்ளவர்கள், 23ம் தேதி காலை, 8 மணிக்குள் கோவிலில் வழங்க, கோவில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.