உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி உற்சவம் கொடியேற்றம்

பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி உற்சவம் கொடியேற்றம்

சின்னாளபட்டி: அம்பாத்துறை பத்ரகாளியம்மன் கோயிலில் வருடாந்திர பங்குனி உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றும் விழா நடந்தது.  அம்பாத்துறையில் பாண்டிய மன்னர் கூன்பாண்டியனால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும்  பங்குனி மாதத்தில் அம்மனுக்கு உற்சவம் நடைபெறும்.  இந்த ஆண்டு உற்சவத்திற்கான கொடியேற்றும் விழாவிற்கு ஜமீன்தார் ஹரிகிருஷ்ணசாமி  மாக்கள நாயக்கர், இளைய ஜமீன்தார் துரைப்பாண்டி மாக்கள நாயக்கர் தலைமை வகித்தனர்.  கோயில் குருக்கள் செந்தில்குமார் முன்னிலை  வகித்தார். கொடியேற்றத்திற்கு பிறகு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் காப்பு கட்டி  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !