உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் கோலாகலம்

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் கோலாகலம்

கடையநல்லூர் : பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயிலில் நடந்த வருஷாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து அனுக்ஞை, விநாயகர், கும்ப பூஜை, ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திருமலைக்குமரனுக்கு அரோகரா பக்தி கோஷம் முழங்க, விமான அபிஷேகம், விசேஷ அலங்கார தீபாராதனை நடந்தது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரவு திருமலைக்குமரன் மயில் வாகனத்தில் திருமலையில் வீதியுலா வந்தார். வருஷாபிஷேக விழாவில் திருக்கோயில் உதவி ஆணையர் ரோஜாலி சுமேதா, திருக்கோயில் முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், பண்பொழி அதிமுக., பேரூர் செயலாளர் பரமசிவன், முன்னாள் அறங்காவலர்கள் கிளாங்காடு மணி, கணபதி வேல்சாமி, இடைகால் வேல்சாமி, ராசா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பொது மேலாளர் ரவிராஜா, கிருஷ்ணாபுரம் கல்யாணசுந்தரம், மாலையப்பன் மற்றும் கோயில் தலைமை அர்ச்சகர் துரைபட்டர், முன்னாள் தலைமை அர்ச்சகர் ராஜாபட்டர், அரிகரபட்டர், கண்ணன்பட்டர், ரமேஷ்பட்டர், இலஞ்சி ஹரிபட்டர், குற்றாலம் மணிக்குட்டி பட்டர், கோயில் பணியாளர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !